23
Thu, Nov
10 New Articles

சுசீந்திரம் மணக்குடியான் கால்வாய் தூர்வாரும் பணி: மத்திய அமைச்சர் இன்று துவக்கி வைக்கிறார்

News

சுசீந்திரம் மணக்குடியான் கால்வாயை தூர்வாரும் பணியை மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று துவக்கி வைக்கிறார்.

சுசீந்திரம், நவ.14: மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று குமரி மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைக்கிறார். தூத்துக்குடி வ.உ.சி துறைமுக பொறுப்புக்கழகத்தின் பெரிய நிறுவனங்களுக்கான சமூக கடமை  நிதியிலிருந்து  25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து குழித்துறையில் படித்துறை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான பூமி பூஜையில் மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று காலை  பணியை துவங்கி வைக்கிறார். மாலையில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் நடக்கும் சேமிப்பு கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்கும் நிகழ்ச்சியை துவங்கி வைக்கிறார். பின்னர் நாகர்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட ராமன்புதூர் ஜங்சனில் பாராளுமன்ற உள்ளூர் மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கை துவங்கி வைக்கிறார். சுசீந்திரம் மணக்குடியான் கால்வாய் தூர்வார தூத்துக்குடி வ.உ.சி துறைமுக பொறுப்புக்கழகத்தின் பெரிய நிறுவனங்களுக்கான சமூககடமை நிதியிலிருந்து 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து பணியை துவங்கி வைக்கிறார். இரவிபுதூர் ஊராட்சியில் இரவிபுதுரில் இலவச காஸ் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார். இத்தகவலை நாகர்கோவில் மத்திய அமைச்சர் முகாம் அலுவலகம் தெரிவித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS