23
Thu, Nov
10 New Articles

டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மீது போலீசில் புகார்

News

 

தொல்.திருமாவளவனை பற்றி தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் செய்த விமர்சனம் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நாகர்கோவில் போலீசில் நேற்று புகார் அளித்தனர்.

நாகர்கோவில்,அக்.26: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையத்துக்கு வந்து ஒரு புகார் மனுவை கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

எங்களது கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மீது பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். அதாவது எங்களது தலைவர் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும், நிலத்தின் உரிமையாளரை மிரட்டி நிலத்தை அபகரிப்பவர் என்றும், எங்களது அலுவலகமும் வளைத்து போடப்பட்டதுதான் என்றும் குற்றச்சாட்டுகள் கூறியுள்ளார்.

தொல்.திருமாவளவன் அனைத்து தரப்பினருடனும் நன்றாக பழகக்கூடியவர். அனைத்து சமூகமும் ஒற்றுமையோடு, சகோதரர்களாக இருக்க வேண்டும் என விரும்பக்கூடியவர். அவர் மீது இதுவரை எந்த குற்றச்சாட்டும் இல்லை.

கடந்த 25 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும், தமிழின நலனுக்காகவும் தொடர்ந்து போராடி வருகிறார். அவரை கட்டப்பஞ்சாயத்து செய்தார், நிலத்தை அபகரிப்பு செய்தார் என்று பொய்யாகவும், அவரது நற்பெயரை கெடுக்கும் வகையிலும் கூறிய தமிழிசை சவுந்தரராஜன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படியும், இந்திய தண்டனை சட்டத்தின் படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS