23
Thu, Nov
10 New Articles

தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

News

நாகர்கோவில், ஆக.29: தொழிலாளர்களின் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கலாம்.

நாகர்கோவில் தொழிலாளர் ஆய்வாளர் ஞானசம்பந்தன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு 11ம் வகுப்பு முதல் முதுகலை பட்டம் வரை படிக்க புத்தகங்கள் வாங்குவதற்கு நிதி உதவி அளித்தல், பொறியியல், சட்டம், மருத்துவம், விவசாயம், ஆசிரியர் பயிற்சி மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ஆகிய கல்விகளின் பட்ட மேற்படிப்பு, பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கான கல்வி உதவித்தொகை, தொழிற்பயிற்சி கல்வி மற்றும் மேல்நிலை கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல். 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் கல்வி மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற முதல் 10 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்காக அக்டோபர் மாதம் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்த விபரங்கள் மற்றும் விண்ணப்பங்களுக்கு செயலாளர், தமிழநாடு தொழிலாளர் நலவாரியம், த..பெ.எண் 718, தேனாம்பேட்டை, சென்னை 6 என்ற முகவரிகக்கு சுயவிலாசமிட்ட தபால்தலை ஒட்டப்பட்ட உறையுடன் தொடர்புகொள்ள வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியத்தின் 24321542 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது www.labour.tn.gov.in என்ற இணையதளத்திலோ விபரங்களை அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS