23
Thu, Nov
10 New Articles

அந்தரபுரம் கிராமத்தை தத்தெடுத்த பறக்கை கால்நடை ஆராய்ச்சி மையம்

News

நாகர்கோவில், ஆக.15:  பறக்கையில் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்சி மையம் ஞாலம் ஊராட்சியை சேர்ந்த அந்தரபுரம் கிராமத்தை தத்தெடுத்துள்ளது.

இதன் தொடக்க விழா அந்தரபுரத்தில் நடந்தது. டாக்டர் மால்மருகன் வரவேற்றார். விழாவில் குமரி மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் டாக்டர் சுரேஷ் கலந்து கொண்டு அங்கன்வாடி குழந்தைகளுக்கு இருக்கைகள் மற்றும் நலிவுற்ற பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கென தலா 10 முட்டைக்கோழிகளை வழங்கி பேசினார்.  விழாவில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) நிஜாமுதின், நபார்டு வங்கி மேலாளர் மார்டின்பிரகாசம், முன்னோடி வங்கி மேலாளர் விஸ்வநாதன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பாண்டியன், கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் ஜோசப்சந்திரன், ரிலையன்ஸ் பவுன்டேசன் மேலாளர் ஆன்றனி எட்வர்ட்சிங் ஆகியோர்  கலந்து கொண்டனர். டாக்டர் ரவிமுருகன் நன்றி கூறினார்.

 

 
BLOG COMMENTS POWERED BY DISQUS