23
Thu, Nov
10 New Articles

மதுரை -குமரி 2 வது ரயில் பாதை நிலம் எடுப்பு துவக்கம்

News

கன்னியாகுமரி, ஜூலை 14:  மதுரை கன்னியாகுமரி இடையே இரண்டாவதாக அமைய உள்ள அகல ரயில் பாதைக்கு நிலம் கையகப்படுத்தும், பணிகள் துவங்கி உள்ளன. 

சென்னையில் இருந்து, திருச்சி வரை தற்போது இரட்டை அகல ரயில் பாதை வசதி உள்ளது.  திண்டுக்கல்லில் இருந்து, மதுரை வரை, இரண்டாவது அகல பாதைக்கான பணிகள் நடந்து வருகின்றன. மதுரையில் இருந்து, கன்னியாகுமரி வரை, ஒரே ஒரு அகல ரயில் பாதை மட்டும் உள்ளது. இரண்டாவது பாதைக்கான பணிகள் விரைவில் துவங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இரண்டாவது அகல பாதை எந்த வழித்தடத்தில் அமையும் என்பதற்கான வரைபடத்திற்க்கு வருவாய் துறையினரிடம் ரயில்வே நிர்வாகம் வழங்கி உள்ளது. 

ஒவ்வொரு இடத்திலும், இந்த பாதை அமைக்க எவ்வளவு நீள அகலத்தில் தங்களுக்கு நிலம் தேவைப்படும் என்பதற்கான தெளிவான விளக்கம் இந்த வரைபடத்தில் குறிக்கப்பட்டு உள்ளது. வருவாய் துறையினர் இந்த வரைபடத்தை வைத்து ஒவ்வொரு பகுதியிலும் வரைபட எல்லைக்குள் எந்த சர்வே நம்பருக்கு உட்பட்ட நிலப்பகுதிகள் வருகின்றன. அந்த நிலங்களின் பயன்பாடு என்ன யார் யாரிடம் நிலம் உள்ளது, வீடாக உள்ளதா விவசாய நிலமாக உள்ளதா, கண்மாய், ஓடையாக உள்ளதா, வர்த்தக நிலமாக உள்ளதா. தற்போது நிலத்தின் உரிமையாளர்களின் பட்டியல் அவர்களுக்கு அரசின் தற்போதைய வழிகாட்டு மதிப்பீடுபடி வழங்க வேண்டிய இழப்பீட்டு எவ்வளவு என்பது உள்ளிட்ட விபரங்களை தயாரித்து நிலத்தின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி வருகின்றனர். 

நிலம் கையகப்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடப்பதால் விரைவில்,இரண்டாவது அகல ரயில் பாதை பணிகள் தொடங்கும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.  

BLOG COMMENTS POWERED BY DISQUS