23
Thu, Nov
10 New Articles

மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியில் மீனவர்கள்

News

மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைக்காலம் வருகிற 31–ந் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரி, ஜூலை 11:  ஆழ்கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க ஆண்டுதோறும் தமிழக கடற்பகுதியை கிழக்கு மற்றும் மேற்காக பிரித்து மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த தடை உத்தரவு 45 நாட்கள் அமலில் இருந்தது.

ஆனால் இந்த ஆண்டு முதல் மீன்பிடி தடைகாலம் 61 நாட்களாக உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15–ந் தேதி தொடங்கிய மீன்பிடி தடைக்காலம் ஜூன் 14–ந் தேதியுடன் முடிந்தது.

இதுபோல மேற்கு கடற்கரை பகுதிகளில் ஜூன் 1–ந் தேதி முதல் தடைக்காலம் அமலுக்கு வந்தது. இது வருகிற 31–ந் தேதிவரை அமலில் இருக்கும். குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் 300–க்கும் மேற்பட்ட விசை படகுகள் கரையில் ஒதுக்கி விடப்பட்டுள்ளன. 

மீன்பிடி தடைகாலம் வருகிற 31–ந் தேதியுடன் முடிவதையொட்டி விசைப்படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். படகில் எடுத்து செல்லப்படும் வலைகள், ராட்சத கயிறுகள் போன்றவற்றை சீர் செய்யும் பணிகள் விறு விறுப்பாக நடக்கிறது. 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS