24
Mon, Jul
10 New Articles

கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவிலில் தேரோட்டம்

News

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 10 நாள் வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த மாதம் 29– ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும்  தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசே‌ஷ பூஜை, சிறப்பு வழிபாடுகள் நடந்தது. மேலும் சிறப்பு அன்னதானம், வாகன பவனி, சப்பரபவனி, கலைநிகழ்ச்சிகள் ஆகியவையும் நடந்தது.

கன்னியாகுமரி, ஜூன் 07:  9–ம் திருவிழாவான நேற்று காலை பக்தர்கள் வெள்ளத்தில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து பல்லக்கில் அம்மனை எழுந்தருளச்செய்து சிறப்பு பூஜை, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் நெற்றிப்பட்டம் சூட்டப்பட்ட அலங்கரிப்பட்ட யானை முன்செல்ல பல்லக்கில் அம்மன், தெற்கு ரதவீதி, பிள்ளையார் கோவில் தெரு வழியாக தேர் நின்ற கீழரத வீதியை வந்தடைந்தது. காலை 8 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளினார்.

குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் பாரதி தேர் சக்கரத்தில் தேங்காய் உடைத்து வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். 10–ம் திருவிழாவான இன்று(புதன்கிழமை)காலை 6.30 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதை தொடர்நது வருடத்தில் 5 நாட்கள் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அம்மன் கோவிலுக்குள் பிரவேசம் செய்கிறார், சிறப்பு அபிஷேகம்,மாலை 5 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு தெப்பக்குளக்கரையில் அம்மன் எழுந்தருளி தெப்ப திருவிழா நடைபெறுகிறது.

தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு குடிநீர், மோர், பானகாரம், பழங்கள் வழங்கப்பட்டது. தேர் நிலைக்கு சென்றடைந்ததும் பக்தர்களுக்கு கன்னியம்பல மண்டபத்தில் வைத்து கஞ்சி தர்மம் வழங்கப்பட்டது. 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS