24
Mon, Jul
10 New Articles

குமரி திருவிழா தொடங்கியது

News

கன்னியாகுமரியில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குமரித்திருவிழா-2017 நேற்று முன் தினம் துவங்கி வரும் 7ம் தேதி வரை நடக்கிறது.

நாகர்கோவில், ஜூன் 05: கன்னியாகுமரி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத் திடலில் தமிழ்நாடு  அரசு சுற்றுலாத்துறை மற்றும் குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குமரி திருவிழா -2017 கடந்த வெள்ளிக்கிழமை  துவங்கி வரும்  7ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. வெள்ளிக்கிழமை நடந்த துவக்க விழாவில் மாவட்ட கலெக்டர்  தலைமை வகித்து பேசினார். சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் குத்து விளக்கேற்றி கலை நிகழ்ச்சிகளை  துவக்கி வைத்து பேசினார். 

 அப்போது அவர் கூறியதாவது:–

ஜெயலலிதாவின் வழிகாட்டுதல்படி செயல்படும் தமிழக அரசின்கீழ், கடந்த 3 வருடங்களாக இந்தியாவிலேயே, சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில், தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. மாநிலம் முழுவதும் சுற்றுலாத்துறை மேம்பாடு குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 15 நாட்களாக சுற்றுலா பயணிகளை நோில் சந்தித்து, குறைகள் உடனுக்குடன் களையப்படுகிறது. சுற்றுலாத்தலங்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, ஸ்ரீவில்லிபுதூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தலங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் 4 வருடங்களுக்கு ஒருமுறை திருவள்ளுவர் சிலைக்கு வர்ணம் பூசும் பணி, மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போது, திருவள்ளுவர் சிலையில் படிந்துள்ள உப்பு படிவம் சுத்தநீரால் கழுவப்பட்டு, பேப்பர் பேஸ்ட் மற்றும் சிலிக்கான் அமில கலவை கொண்டு தமிழ்நாடு சுற்றுலா கழக மேலாண்மை இயக்குநர் தலைமையிலான வல்லுநர் குழு மூலம், சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சட்டமன்ற மானிய கோரிக்கையின்போது, அறிவிக்கப்பட்டபடி, உலக சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா விடுதியில் ஆயிரம் போ் அமரும் வசதி கொண்ட கருத்தரங்க அறை மற்றும் நீச்சல் குளம் அமைக்கப்படவுள்ளது.

விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைப்பதற்காக பாலம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தமிழகத்தில் உள்ள திருக்கோவில் மாவட்டங்களை பார்வையிடுவதற்காகவும், மருத்துவ சிகிச்சை மற்றும் உடல்நலம் பேணுவதற்காகவும் வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. சுற்றுலாப்பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுலாத்தலங்களில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் வெல்லமண்டி ந. நடராஜன் கூறினார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS