15
Fri, Dec
18 New Articles

பள்ளி வாகனங்கள் ஆய்வு

News

முளகுமூடு அருகே பள்ளி வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு

முளகுமூடு, ஏப்.30:  குமரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளில் மாணவ–மாணவிகளை அழைத்து செல்லும் வாகனங்கள் ஆண்டுதோறும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படுகிறது. அதன்படி குழித்துறை மற்றும் தக்கலை கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் அனைத்தும் நேற்று முளகுமூடு அருகே கோழிப்போர்விளையில் ஆய்வு செய்யப்பட்டன. 

வட்டாரபோக்குவரத்து அதிகாரி முருகன் மற்றும் பத்மநாபபுரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் சுமார் 300–க்கும் மேற்பட்ட வாகனங்கள் சோதனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. அந்த வாகனங்களில் அரசு விதிமுறைப்படி படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா?, முதல் உதவிபெட்டி, தீயணைப்புகருவி, அவசரகால பாதை போன்றவை உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வுசெய்தனர். மேலும், ஓட்டுனர்களுக்கு பள்ளி வாகனங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. ஆய்வுக்கு பின் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS