19
Thu, Oct
19 New Articles

இரங்கல் செய்தி

News

 பறக்கை, ஏப்.28: பறக்கையை சேர்ந்த திரு கே.ராமசாமி பிள்ளை அவர்கள் இன்று(28ம் தேதி) அதிகாலை 1 மணிக்கு இயற்கை எய்தினார்.

இவர் முன்னாள் பறக்கை கைப்பந்து அணியின் கேப்டனாக இருந்தவர்.

இது குறித்து ஹிந்து பத்திரிகை எடிட்டர் கூறியதாவது .நாகர்கோயிலில் உள்ள டிவிடி பள்ளியில் படித்தார். பள்ளியில் படிக்கையிலேயே வாலிபால் அணியில் விளையாடினார். அவர் விளையாட்டு திறமையை அங்கீீகரித்து கேரளத்தில் காவல்துறையில் பணி வழங்கினார்கள். "தவிர்க்க முடியாத காரணங்களால் பணியை ஏற்றுக்கொள்ளவில்லை. டி.எஸ்.பி. லெவலுக்கு ரிட்டயர் ஆகி, பென்ஷனும் மற்ற காரியங்களெல்லாம் கிடைத்திருக்கும்," என்பார்.

அவருடைய வீட்டில் பெரிய மீசையுடம் அவர் பரிசாகப் பெற்ற வெள்ளிக் கோப்பைகளுடனும் பதக்கங்களுடனும் கம்பீரமாக இருப்பார். நேற்று இரவு காலமான அவர் என் கண்ணுக்குள் அப்படி நிற்கிறார்.

இவர் ஒரு ஆன்மீகவாதி தேசபக்தி மிக்கவர் . அவருடைய இறுதி சடங்கு நாளை April /29/2017 அன்று காலை 10.00 AM மணிக்கு  நடைபெறும்.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS