15
Fri, Dec
18 New Articles

தாமரைபதியில் அய்யா குதிரை வாகனத்தில் கலிவேட்டை

News

பஞ்சபதிகளில் ஒன்றான தென்தாமரைகுளம் தாமரைபதியில் சித்திரைதிருவிழாவின் 8-ம் நாளை முன்னிட்டு அய்யா குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடினார்.

கன்னியாகுமரி, ஏப்.24: பஞ்சபதிகளில் ஒன்றான தென்தாமரைகுளம் தாமரை பதியில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. 8ம் நாள் திருவிழாவில் அய்யா குதிரைவாகனத்தில் எழுந்தருளி பதிவலம் வந்து பின்னர் தேர்வீதிகளில் அருள் பாலித்தார். பக்தர்கள் அய்யாவுக்கு சுருள் வைத்து வழிபட்டனர்.  இரவு 10 மணியளவில் அய்யா கலிவேட்டையாடினார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 11ம் நாள் திருவிழாவான வரும் 24-ம் தேதி பகல் 12 மணிக்கு திருத்தேர்பவனி,2 மணிக்கு சமபந்திவிருந்து, இரவு 10 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை,12 மணிக்கு அய்யா நந்தி வாகனத்தில் பவனிவந்து பக்தர்களுக்கு திருக்காட்சி அளிக்கும் நிகழ்ச்சி,  1 மணிக்கு திருக்கொடியிறக்கம் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் அய்யாவுக்கு பணிவிடை, உச்சிபடிப்பு, கலைநிகழ்ச்சிகள், அன்னதானம் ஆகியவை நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் பொன்னி, குருக்கள் ராஜசேகரன், பிரபாகரன், குரு பரம்பரையினர், அன்புகொடிமக்கள் செய்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS