23
Wed, Aug
6 New Articles

முழுஅடைப்புக்கு ஆதரவு திரட்ட துண்டு பிரசுரம் வினியோகம் : சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.

News

விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 25ம் தேதி நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் பங்கேற்பதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

நாகர்கோவில், ஏப்.24:  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து 25–ந்தேதி (நாளை) தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்துக்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் வணிகர்களிடம் ஆதரவு கேட்பது எனவும். அனைத்து கட்சிகளின் தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாகவும். இதனால் பஸ்கள் இயக்கம் இருக்காது எனவும். அன்று பஸ்களில் பொதுமக்கள் வெளியூர் பயணங்கள் தவிர்க்கவேண்டும் எனவும் இந்த கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

குமரி மாவட்ட போராட்டுக்குழுவில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சிகள் சார்பில் நேற்று காலை கோட்டார் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன. இதற்கு தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மகேஷ், தில்லைசெல்வம், ஷேக்தாவுது மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தி.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS