23
Sat, Sep
8 New Articles

குருசுமலை வைரவிழா திருப்பயணம் நிறைவு

News

குருசுமலை வைரவிழா திருப்பயணம் எட்டாம் நாளான நேற்று நிறைவு பெற்றது. புனித வெள்ளியை முன்னிட்டு வரும் 13, 14 தேதிகளில் திருப்பயணம் நடைபெறும்.

 திற்பரப்பு, ஏப்.03: தென்குருசுமலை வைரவிழா திருப்பயணம் தூய சிலுவை மீட்பின் வழி என்ற மைய சிந்தனையுடன் கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி துவங்கியது. ஆயர் வின்சன்ட் சாமுவேல் மலை அடிவாரத்தில் திருக்கொடியேற்றி புனித பயணத்தை துவக்கி வைத்தார். தொடக்க திருப்பலி பேராயர் சூசைபாக்கியம் தலைமையில் நடந்தது. துவக்க விழா பொதுக் கூட்டத்தை கேரளா முதல்வர் பிணறாயி விஜயன் துவக்கி வைத்தார்.   தொடர்ந்து எட்டு நாட்கள் பல்லாயிரக்கணக்கானோர் மலை ஏறி சிலுவை தரிசனம் நடத்தினர். மலை அடிவாரத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன்,  அமைச்சர்கள் கடகம் பள்ளி சுரேந்திரன், ஜலீல், மாத்யூ தோமஸ், சுனில் குமார், ஷைலஜ டீச்சர், மேழ்ஸிகுட்டி அம்மா, எம்.எல்.எ க்கள் ஹரீந்திரன், வசந்தகுமார் உள்பட பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.   நிறைவு நாளான நேற்று அதிகாலை முதல் மலை ஏற மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மலை அடிவாரத்தில் காலை 9 க்கு நடந்த ஆடம்பர திருப்பலிக்கு அருட்தந்தை வின்சென்ட் சாமுவேல் தலைமை வகித்தார். மாலை 3.30க்கு நடந்த விழா நிறைவு திருப்பலி அருட்தந்தை கிறிஸ்துதாஸ் தலைமையில் நடந்தது. மாலை 5க்கு நிறைவு பொதுக் கூட்டம் நடந்தது. தொடர்ந்து குருசுமலை இயக்குனர் வின்சன்ட் பீட்டர் விழா கொடியை இறக்கி திருப்பயணத்தை நிறைவு செய்தார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS