23
Thu, Nov
10 New Articles

தக்கலை ஷெய்கு பீர்முஹம்மது ஸாகிபு ஒலியுல்லா (ரலி) ஆண்டு பெருவிழா

News

தக்கலை  ஷெய்கு பீர்முஹம்மது ஸாகிபு ஒலியுல்லா (ரலி) ஆண்டு பெருவிழா இன்று  கொடியேற்றுதல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.

தக்கலை, மார்ச் 29: தக்கலையில் உலகம் போற்றும் பீர் முஹமதுஅப்பா தர்ஹா உள்ளது இங்குஆண்டுதோறும் மெஞ்ஞான மாமேதை ஷெய்கு பீர்முஹம்மது ஸாகிபு ஒலியுல்லா (ரலி) ஆண்டு பெருவிழா கிராஅத், மார்க்கப் பேருரை, உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடள் இவ்விழா இன்று (29ம் தேதி) கொடியேற்று நிகழ்ச்சியுடன்  துவங்குகிறது. நிகழ்ச்சியில் கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர்.

மார்ச் 29 முதல்  ஏப்ரல் 11ம் தேதி வரை ரஜப்பிறை 1 முதல் 14 வரை மௌலிது, ஓதுதல் ஏப்ரல் 3ம் தேதி முதல் 9ம்தேதி வரை மார்க்கப்  பேருரை 10ம் தேதி ஞான மாமேதை பீர் முஹம்மது அப்பாவின் றோசுமீஸாக்கு மாலை எனும் 400 ஆண்டுகள் பழமையும் காப்பியச் செழுமையுங்கொண்ட ஞான இலக்கியம் வெளியீட்டு நிகழ்ச்சி,  11ம்தேதி ஞான புகழ்ச்சி பாடுதல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடக்கிறது . 1ம் திருவிழா இன்று 29ம்தேதி இரவு 9 மணிக்கு  கொடியேற்றுதல் நிகழ்ச்சி நிர்வாகிகள் முன்னிலையில் நடக்கிறது.  3ம் தேதி  நடக்கும் நிகழ்ச்சிக்கு அஞ்சுவண்ணம் பீர்முஹம்மதியா முஸ்லிம் அசோஸியேசன் தலைவர் முஹமது ஹைதர் அலி தலைமை வகிக்க மார்க்கப் பேருரை நடக்கிறது. பச்சை சிறகுகள் என்னும் சிந்தனையில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பேரா. முஹமம்மது இல்யாஸ் உஸ்மானி பேசுகிறார். நிர்வாகக் குழு உறுப்பினர் ஷாகுல் ஹமீது நன்றி கூறுகிறார். 4 மற்றும் 5ம் தேதிகளில் நெஞ்சுதனிலே இருக்கும் நித்தன் மற்றும் சூஃபிகளுக்கொரு சோபனம்  என்ற தலைப்புகளில் மண்ணடி மஜித் லஜ்னத்துல்முஹ்சினீன் தலைமை  இமாம் ஃபகறுதீன்  பாஸில் பாகவி மார்க்கப் பேருரையாற்றுகிறார். துணைத்தலைவர் ஷாகுல் ஹமீது நன்றி கூறுகிறார்.6ம் தேதி மரணத்திற்கும் அப்பால் என்ற பொருளில் ஏர்வாடி அல்ஜாமிஅல்அஸ்ஹர் அரபிக்கல்லூரி முதல்வர் அபுல்கலாம் இம்தாதி பேசுகிறார். நிர்வாகக் குழு உறுப்பினர் ஷாகிர் அலி நன்றி கூறுகிறார். 7ம் தேதி மாமறைப் போற்றுதும் என்ற மைய கருத்தில் மேலப்பாளையம் அரபிக்கல்லூரி ஹாஜா ஹுசைன் உஸ்மானி பேசுகிறார். ஷேக் ஜுனைத் நன்றி கூறுகிறார். 8ம் தேதி எந்தையும் தாயும் என்ற பொருளில் மந்தைவெளி ஈத்கா பள்ளிவாசல் தலைமை இமராம் இல்யாஸ் ஆலிம் ரியாஜி பேசுகிறார்.பொருளாளர் ஹாரிஸ் நன்றி கூறுகிறார்.

9ம்தேதி அல்லா ஒருவனென்றும் அஹ்மதவன் தூதரென்றும் என்றபொருளில் விருதுநகர் வீரச்சோழன் ஹைராத்துல் இஸ்லாம்அரபிக்கல்லூரி முதல்வர்அப்துல்காதர் பாகவி பேசுகிறார். ஹுசைன் அலி நன்றி கூறுகிறார்.10 தேதி ஞானமாமேதை பிர்முஹமம்மது அப்பாவின் றோசுமீஸாக்கு மாலை என்னும் 400 ஆண்டுகள் பழமையும் காப்பியச் செழுமையும் கொண்ட ஞான இலக்கிய வெளியிட்டு நிகழ்ச்சிக்கு தலைவர் தக்கலை ஹலிமா தலைமை வகிக்கிறார். ஜெஹபர் சாதிக் மிஸ்பாஹி கிராஅத் ஓதுகிறார். குமரி அபுபக்கர் இசையருவி வழங்குகிறார்.செயலாளர் ஷேக்பரீத் வரவேற்கிறார். அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் முஹைதீன் காப்பியத்தை வெ ளியிட்டு பேசுகிறார். தலைவர் முஹமது ஹைதர் அலி நன்றி கூறுகிறார்.11ம் தேதி இரவு 9மணி முதல் 12ம் தேதி அதிகாலை வரை பீரப்பா பற்றிய ஞான புகழ்ச்சிப் பாடுதல்கள் நடக்கிறது. 12ம் தேதி மாலையில் நேர்ச்சை வழங்குதல் நிகழ்ச்சி, 14ம்தேதி  இரவு 7.30 மணிக்கு மூன்றாம் ஸியாரத் நேர்ச்சை வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழா  ஏற்பாடுகளை அஞ்சுவண்ண பீர்முஹம்மதியா முஸ்லிம் அசோசியேசன் நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS