23
Thu, Nov
10 New Articles

பார்வதிபுரத்தில் இன்று காலை 6மணி முதல் ஒருவழி பாதை முறை அமல்

News

பார்வதிபுரம் மேம்பால பணிகள் இன்று துவங்குவதை தொடந்து காலை 6 மணி முதல் ஒன்வே அமலுக்கு வருகிறது.

நாகர்கோவில், மார்ச் 18: பார்வதிபுரம் மேம்பால பணிகள் இன்று துவங்குவதை தொடந்து காலை 6 மணி முதல் ஒன்வே அமலுக்கு வருகிறது. போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் விதமாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முயற்சியால் பார்வதிபுரத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை மண் பரிசோதனை உள்ளிட்ட பணிகள் நடந்து வந்தன. இந்த நிலையில் முதற்கட்ட காங்கிரீட் பில்லர்கள் அமைக்கும் பணி இன்று துவங்குகிறது. இதை முன்னிட்டு இன்று காலை 6 மணிமுதல் ஒன்வே அமலுக்கு வருகிறது. மார்த்தாண்டம், தக்கலை வழியாக வரும் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் கள்ளியங்காடு ஜங்ஷன் வழியாக திருப்பி விடப்படுகிறது. பஸ் மற்றும் பிற வாகனங்கள் பார்வதிபுரம் ஜங்ஷனிலிருந்து வலதுபுறமாக கலெக்டர் அலுவலக ரோட்டில் திருப்பிவிடப்படுகிறது. கன்னியாகுமரியிலிருந்து வரும் வாகனங்கள் கலெக்டர் அலிவலக ஜங்ஷனில் வலதுபுறம் திரும்பி பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி வழியாக வெட்டூர்ணிமடம் சென்று அங்கிருந்து பார்வதிபுரம் செல்லும் வகையிலும். வடசேரி வழியாக தக்கலை செல்லும் வாகனங்கள் வெட்டூர்ணிமடம் வழியாக பார்வதிபுரம் ஜங்ஷன் செல்லும் வகையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. மேம்பால பணிகள் முடியும்வரை இந்த ஒன்வே அமலில் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஒன்வே குறித்து வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கும் வழிகாட்டி பலகைகள் வைக்கும் பணி நேற்று மாலை முதல் நடந்து வருகிறது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS