29
Mon, May
12 New Articles

வெறிச்சோடிய முக்கடல் சங்கமம்

News

கன்னியாகுமரியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துவரும்  நிலையில் முக்கடல் சங்கம பகுதி சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

கன்னியாகுமரி, மார்ச், 15: கன்னியாகுமரியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துவரும்  நிலையில் முக்கடல் சங்கம பகுதி சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

தமிழ்நாட்டில் இந்தாண்டு கோடைகாலம் துவங்கும் முன்பே வெயிலில் தாக்கம் அதிகரித்துவருகிறது.காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை வெயிலின் பாதிப்பால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நீர்நிலைகள் வறண்டு காணப்படுவதால் குடிநீர் தட்டுபாடு நிலவுகிறது. சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் வெயில் கடுமையாக இருப்பதால் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை முக்கடல்சங்கமம், கடற்கரை சாலை, ரதவீதி, காந்திமண்டப சாலை என அனைத்து இடங்களும் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் கடைகளில் வியாபாரம் இன்றி காணப்படுகிறது. மாலை 5 மணிக்கு மேல் ஓட்டல்களில் தங்கியிருக்கும் சுற்றுலா பயணிகள் காற்று வாங்குவதற்காக வெளியே வருகின்றனர். வெளி மாநில சுற்றுலா பயணிகள் மட்டும் குறைந்தளவே கடலில் குளிக்கின்றனர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS