24
Mon, Jul
10 New Articles

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் எட்டாம் கொடைவிழா

News

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடைவிழா நேற்று நடந்தது. 

        மணவாளக்குறிச்சி, மார்ச்: 15:குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழா கடந்த 26ம் தேதி முதல் 7ம் தேதி வரை பத்து நாட்கள் நடந்தது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து நேற்று எட்டாம் கொடைவிழா நடந்தது. இதையொட்டி காலை 4.30 மணிக்கு திருநடை திறப்பு, உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், உஷபூஜை, பூமாலை சடங்குகள், உச்சிகாலபூஜை, அன்னதானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.  மாலை சாயரட்சை தீபாராதனை, பஜனை, வில்லுப்பாட்டு அலங்கார தீபாராதனை, வாணவேடிக்கை, கொடைவிழா சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் தமிழகம் மட்டுமின்றி கேரள மாநிலத்தில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் கடலில் புனித தீர்த்தமாடி பொங்கலிட்டு நேர்த்தி கடன் செலுத்தி வழிபட்டனர். விழாவில் கோயிலை சுற்றி சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டு அவரவர்கள் விரும்பும் உணவை சமைத்து அங்கேயே அம்மனுக்கு படைத்து நண்பர்களுடன் உண்டு மகிழ்ந்தனர். விழாவை முன்னிட்டு நாகர்கோவில், கன்னியாகுமரி, களியக்காவிளை, மார்த்தாண்டம், குலசேகரம், தக்கலை உட்பட முக்கிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவில் மணவாளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 30ம் தேதி மீனபரணி கொடைவிழா நடக்கிறது

BLOG COMMENTS POWERED BY DISQUS