23
Sat, Sep
8 New Articles

தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து கன்னியாகுமரியில் மீனவர்கள் தொழில்முடக்கம்

News

ராமேஸ்வரம் மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதைக்  கண்டித்து கன்னியாகுமரியில் நேற்று மீனவர்கள் தொழில்முடக்கம் செய்தனர்.

கன்னியாகுமரி, மார்ச் 14: ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்டோ (21) கடந்த 6ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தார். இதனையடுத்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7 -ம்தேதி  முதல் தொடர்போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து கன்னியாகுமரியில் மீனவர்கள் நேற்று தொழில் முடக்கம் செய்தனர். கன்னியாகுமரி, சின்னமுட்டம் மீன்பிடிதுறைமுகத்தில் 250 க்கும் மேற்பட்ட படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை. மேலும் வாவத்துறை, புதுக்கிராமம், ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி உள்ளிட்ட கடலோர கிராமங்களில் 400க்கும் மேற்பட்ட வள்ளங்களும் மீன்பிடிக்கசெல்லவில்லை.

BLOG COMMENTS POWERED BY DISQUS