26
Wed, Apr
21 New Articles

கழிவுநீரேற்று நிலையம் அமைக்க எதிர்ப்பு

News

கழிவுநீரேற்று நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் போராட்டம்

நாகர்கோவில்,மார்ச் 14:நாகர்கோவில் நகராட்சிப் பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான கழிவுநீரேற்று நிலையம் வடிவீஸ்வரம் பறக்கின்கால் பகுதியில் அமைப்பதற்கான பணிகள் நடைபெற இருக்கிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று காலை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கழிவுநீரேற்று நிலையம் அமைய உள்ள பகுதிக்கு வந்து திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆண்களும், பெண்களுமாக ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் இந்தப்பகுதியில் கழிவு நீரேற்று நிலையம் அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள். மேலும் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை இந்த இடத்தில் இருந்து செல்லப்போவதில்லை என்றும் அவர்கள் கூறினர். 

BLOG COMMENTS POWERED BY DISQUS