23
Sat, Sep
8 New Articles

ஜெயலலிதா மரணம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் உண்ணாவிரதம்

News

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தக்கோரி நாகர்கோவிலில் அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

 

நாகர்கோவில், மார்ச் 09: முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், எனவே இதுதொடர்பாக நீதி விசாரணை நடத்த கோரியும் நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் அருகில் அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

போராட்டத்துக்கு மாவட்ட பால்வளத்தலைவரும், அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளருமான எஸ்.ஏ.அசோகன் தலைமை தாங்கினார். கூட்டுறவு ஒன்றிய தலைவர் சந்தோஷ் வரவேற்றார். உண்ணாவிரதத்தை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பிரசாத் தொடங்கி வைத்து பேசினார்.

தூத்துக்குடி எம்.பி. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், ‘மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் தீராத சந்தேகம் உள்ளது. அவருடைய மரணத்தில் உள்ள மர்மங்கள் தொடர்பாக நீதி விசாரணை நடத்த கேட்டு ஜனாதிபதியை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம். எனவே நீதி விசாரணை நடத்துவதற்கான உத்தரவு வரும் என்று நம்புகிறோம். அவ்வாறு விசாரணை நடத்தப்பட்டால் அதன் முடிவில் சசிகலா குடும்பத்தினர் ஜெயில் செல்வது உறுதி’ என்றார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS