24
Mon, Jul
10 New Articles

குலசேகரத்தில் குழந்தைகள் காப்பகத்திற்கு ‘சீல்’

News

குலசேகரத்தில் அனுமதியின்றி செயல்பட்ட குழந்தைகள் காப்பகத்தில் தங்கி இருந்த 3 மாணவிகள் உள்பட 14 பேர் மீட்கப்பட்டனர். அத்துடன் காப்பகத்துக்கு அதிகாரிகள் ‘சீல்‘ வைத்தனர்.

 

குலசேகரம், மார்ச் 08: குலசேகரம் கான்வென்ட் சந்திப்பில் உள்ள  குழந்தைகள் காப்பகத்தில் பிளஸ்–2 மாணவிகள் 2 பேர், எஸ்.எஸ்.எல்.சி. மாணவி ஒருவர் உள்பட 14 பேர் தங்கி இருந்தனர். இந்த காப்பகம் முறையாக பதிவு செய்யப்படவில்லை எனவும், அனுமதியின்றி செயல்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.

 இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், காப்பக நிர்வாகிகளுக்கு பல முறை அறிவிப்புகள் கொடுத்தனர். ஆனால், காப்பக நிர்வாகிகள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

இந்தநிலையில் நேற்று மதியம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரி குமுதா தலைமையில், அதிகாரிகள் குழுவினர் காப்பகத்தில் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு போதிய வசதிகள் இன்றி 3 மாணவிகள் மற்றும் 11 பெண் குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அதிகாரிகள் காப்பகத்துக்கு ‘சீல்‘ வைத்தனர். அத்துடன் அங்கு தங்கியிருந்த 14 பேரையும் அதிகாரிகள் மீட்டனர்.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS