23
Sat, Sep
8 New Articles

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மாணவ-மாணவிகள் போராட்டம்

News

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய கோரி கல்லூரி மாணவ-மாணவிகள் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

நாகர்கோவில், மார்ச்,07:  மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் (இயற்கை எரிவாயு) எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் போராட்டம் வலுவடைந்து வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோழிப்போர்விளை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவ- மாணவிகள், இளைஞர்- இளம்பெண்கள் என ஏராளமானோர் கோழிப்போர்விளை தூய மிக்கேல் அதிதூதர் ஆலய பங்குத்தந்தை பபியான்ஸ் தலைமையில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர்.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தால் விவசாய நிலம் பாதிக்கப்படும். குடிநீர், பாசனநீர் கிடைக்கும் நிலத்தடி நீர்பிடிப்புகள் வற்றிப்போகும். கடல்நீர் உட்புகும். கட்டிடங்கள் சிதையும், நிலம் உள்வாங்கும். பசுமையான வயல்வெளிகள் பாலைவனமாக மாறும். நிலங்கள் சுடுகாடாக மாறும். தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டம் பாதிப்படையும்.

எனவே நமது இயற்கை வளங்களை நாமும் அனுபவித்து, நமது சந்ததிகளும் அனுபவிக்க விவசாய பகுதிகளில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் என்றும், இத்திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS