23
Thu, Nov
10 New Articles

ஈரான் சிறையில் 151 நாள்களாக தவிக்கும் தமிழக மீனவர்கள்! மீட்க உறவினர்கள் கோரிக்கை

News

ஈரான் நாட்டுச் சிறையில் உள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் உறவினர்கள்  கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

 

கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 35 மீனவர்கள் ஈரான்  கடல் எல்லைப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ஈரான் நாட்டு கடலோர காவல்படையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.

150 நாள்களுக்கு மேலாகியும் அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் இதுவரை நடவடிக்கை எடுக்காததால், மீனவர்களின் உறவினர்கள் குழந்தைகளுடன் சென்று குமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ஆர் சவானிடம் மனு அளித்தனர். மனுவில், 'மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்காவிடில், இந்திய அரசால் தங்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை அரசிடமே திருப்பி ஒப்படைத்துவிடுவோம்' என   தெரிவித்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS